விண்ணப்பம்: இந்தியா நிதிச் சேவைகள் சரிபார்ப்பு

வழிமுறைகள்:

இந்தப் படிவம், இந்தியாவில் உள்ள நிதிச் சேவைகள் விளம்பரதாரர்களுக்கான Google -இன் கொள்கையை ஆதரிப்பதற்கானது ஆகும்.

  1. உங்கள் உரிமம் பெற்ற வாடிக்கையாளர் அல்லது தாய் நிறுவனத்தின் சார்பாக Google விளம்பர ஐடியை வைத்திருக்கின்ற யினால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக (மார்கெட்டிங் ஏஜென்சி அல்லது துணை நிறுவனம் போன்றவை) நீங்கள் இருந்தால், உங்கள் சொந்த தகவலை வழங்க வேண்டாம், அதற்கு பதிலாக உங்கள் வாடிக்கையாளர் அல்லது தாய் நிறுவனத்தின் தகவலை விண்ணப்பிக்கும் போது வழங்கவும்.
  2. படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்தவுடன், உறுதிப்படுத்தல் மின்னஞ்சலை நீங்கள் பெறுவீர்கள் (அதன் நகல் Google -க்கும் அனுப்பப்படும்).
  3. உறுதிப்படுத்தல் மின்னஞ்சலில் உங்கள் பயன்பாட்டிற்கான குறிப்பிட்ட குறியீடு இருக்கும் (உங்கள் "G2 குறியீடு"). தயவுசெய்து உங்கள் G2 குறியீட்டை பத்திரமாக சேமிக்கவும் மற்றும் அதை இரகசியமாக வைத்திருக்கவும்.
  4. 5 நாட்களுக்குள், உங்கள் விண்ணப்பத்தின் நிலை (எ.கா., அங்கீகரிக்கப்பட்டது, நிராகரிக்கப்பட்டது) குறித்து G2 -லிருந்து அறிவிப்பைப் பெறுவீர்கள்.
  5. அங்கீகரிக்கப்பட்டால், நீங்கள் Google -க்கு திரும்பவும் சென்று, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒத்த தகவலுடன் சேர்த்து, உங்கள் G2 குறியீட்டை அவர்களது படிவத்தில் உள்ளிட வேண்டும்
* தேவையான புலங்கள்
உங்கள் G2 குறியீடு உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், G2 ஆதரவுக் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
750 எழுத்துகளில் முடிக்கவும்

உங்களுடைய முந்தைய விண்ணப்பத்திலிருந்து தகவல்களைக் கொண்டு மீண்டும் விண்ணப்பிக்கவும். உங்களுடைய அடையாளத்தைச் சரிபார்க்க, நீங்கள் கடந்த சமர்ப்பிப்பின் போது உள்ளிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு சரிபார்ப்புக் குறியீடு அனுப்பப்படும்.

வெற்றுப் படிவத்தைக் கொண்டு மீண்டும் விண்ணப்பிக்கவும்.

குறியீட்டைப் பெறவில்லையா?
உங்களுடைய கடந்த சமர்ப்பிப்பில் உள்ளிட்ட முகவரிக்கு ஒரு சரிபார்ப்புக் குறியீடு அனுப்பப்பட்டுள்ளது. சரிபார்ப்புக் குறியீடு கொண்ட மின்னஞ்சலை நீங்கள் பெறாவிட்டால், தயவுசெய்து G2 ஆதரவு குழுவைத் தொடர்பு கொள்ளவும்
பொறுப்புத்துறப்பு: கீழே உள்ளிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் வார்த்தை மாறாமல் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்தத் தகவல்களில் ஏதேனும் நீங்கள் Google -க்கு வழங்குகிற (வழங்கிய) அல்லது இந்தியக் ஒழுங்குமுறைப்படுத்துபவர்களுக்கு வழங்கிய தகவல்களுடன் பொருந்தவில்லை என்றால், குறிப்பிடத்தக்க தாமதங்கள் ஏற்படலாம் மற்றும்/அல்லது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.

நீங்கள் எந்த வகையான நிதிச் சேவைகளை வழங்குகிறீர்கள் என்பதைக் குறிப்பிடவும் (பொருந்தும் அனைத்திலும் குறியிடவும்): *


எனது வணிகம் RBI -ஆல் உரிமம் பெற்றது, பதிவுசெய்யப்பட்டது அல்லது அங்கீகரிக்கப்பட்டது மற்றும் அதை பின்வரும் ரெஜிஸ்ட்ரியில் காணலாம் (முக்கியம்: உங்கள் வணிகத்தைப் பற்றிய அதிகபட்ச தகவலை வழங்கும் ரெஜிஸ்ட்ரியைத் தேர்வு செய்யவும்). *

எனது வணிகம் IRDAI -இல் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் அதை பின்வரும் ரெஜிஸ்ட்ரியில் காணலாம் *

எனது வணிகம் பின்வரும் ரெஜிஸ்ட்ரியில் PFRDA -இன் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது *

எனது வணிகம் பின்வரும் ரெஜிஸ்ட்ரியில் NPCI -இன் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. *

பின்வரும் விதிவிலக்குகளில் எது உங்கள் வணிகத்திற்குப் பொருந்தும் என நீங்கள் நம்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிடவும். தயவுசெய்து கவனிக்கவும்: தேர்வுசெய்த விலக்கிற்கு நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள் என்பதை உறுதிபடுத்த ஆவணத்தை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படக்கூடும்.

தயவுசெய்து உங்கள் வணிக மாடலை சிறப்பாக விவரிக்கும் ஒரு பெட்டியில் குறியிடவும்:

தயவுசெய்து கவனிக்கவும்: (1) உங்கள் வலைதளத்தில் உங்களது ஒழுங்குபடுத்தப்பட்ட முதல் தரப்பு நிதிச் சேவை வழங்குநர்(கள்) பற்றிய எளிதில் கண்டறியக்கூடிய பொதுவெளி அறிக்கைகளை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட முதல் தரப்பு நிதிச் சேவை வழங்குநர்களில் ஒருவரின் ஒழுங்குமுறை விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும்.

FS அல்லாத வணிக மாடல் ஒழுங்குபடுத்தப்பட்ட 1P FS சேர்க்கை
ஆட்டோ டீலர்ஷிப்கள் கார் ஃபைனான்சிங், ஆட்டோ லீஸ்கள், ஆட்டோ இன்சூரன்ஸ்
ஆட்டோ டீலர்ஷிப்கள் வணிகத்தளங்கள் கார் ஃபைனான்சிங், ஆட்டோ லீஸ்கள், ஆட்டோ இன்சூரன்ஸ்
ஆன்லைன் ட்ராவல் முகவர்கள் ட்ராவல் இன்சூரன்ஸ்
ரீடெயில் இப்போது வாங்கி பின்னர் பணம் செலுத்துக

தயவுசெய்து Google Ads -இல் நீங்கள் விளம்பரப்படுத்தும் வணிகத்தைப் பற்றிய சுருக்கமான விளக்கத்தையும், நிதிச் சேவைகளை நாடுவது போல் தோன்றும் பயனர்களை இலக்கு வைப்பதற்கான உங்களின் நியாயத்தையும் வழங்கவும். நிதிச் சேவைகள் விளம்பரம் செய்வதற்கான தேவைப்பாடுகள் உங்களுக்குப் பொருந்தும் என்று உங்களுக்கு Google -லிருந்து ஒரு அறிவிப்பு வந்தால், ஆனால் நீங்கள் நிதிச் சேவைப் பயனர்களை இலக்கு வைக்கிறீர்கள் என்று நீங்கள் நம்பவில்லை என்றால், தயவுசெய்து அதைக் கீழே குறிப்பிடவும். *

உரிமம் பெறுவதிலிருந்து உங்களுக்கு விலக்கு இருந்தால் அல்லது நீங்கள் ஒழுங்குமுறை அமைப்பிடமிருந்து ஏதேனும் சிறப்பு ஒப்புதல் அல்லது அனுமதிகள் பெற்றிருந்தால், 2 ஆவணங்கள் வரை இங்கு தரவேற்றலாம்.

உங்கள் தொழில் நிறுவனம் தொடர்பான கூடுதல் குறிப்புகள் எவற்றையும் நீங்கள் இங்கு உள்ளிடலாம். நீங்கள் ஓர் ஆவணத்தைத் தரவேற்றியிருக்கிறீர்கள் என்றால், தயவுசெய்து அந்த ஆவணத்தைப் பற்றிச் சுருக்கமான விளக்கம் ஒன்றை அளியுங்கள். *

உங்கள் Google Ads வாடிக்கையாளர் ஐடி (ID)-யை வழங்கவும் *
குறிப்பு: இதை நீங்கள் சரியாக டைப் செய்கிறீர்கள் என்பதை தயவுசெய்து உறுதிப்படுத்தவும். ஒரு விண்ணப்பத்திற்கு ஒரே ஒரு Google Ads வாடிக்கையாளர் ஐடி மட்டுமே அனுமதிக்கப்படும். ஏதேனும் பிழைகள் இருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.
வெற்றுக்கோடுகளை உள்ளிட வேண்டாம். மேலாளர் கணக்குகளுக்கு (பல கணக்குகளை நிர்வகிக்க உங்களுக்கு உதவுகின்ற கணக்குகள்) தகுதி இல்லை; ஒவ்வொரு குழந்தை கணக்கும் தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். உங்கள் Google Ads வாடிக்கையாளர் ஐடி (ID)-யைக் கண்டறிவதற்கான உதவிக்கு, இங்கே கிளிக் செய்யவும்.

10 இலக்கங்கள், டேஷ்கள் கூடாது, அதாவது. 1234567890

விண்ணப்பதாரருடனான உங்கள் உறவுமுறையையும், பத்திரிக்கை வெளியீடுகள், இணையதள இணைப்புகள், வணிகத் தகவல் தளங்கள் போன்றவை உள்ளிட்ட இணைப்பை G2 எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதையும் தயவுசெய்து விவரிக்கவும்.

பயனர் எதிர்கொள்ளும் வணிகப் பெயர் / DBA

தயவுசெய்து உங்கள் பதிவு செய்யப்பட்ட முழு வணிகப் பெயரை வழங்கவும். *
குறிப்பு: இந்திய ஒழுங்குமுறை அமைப்பில் உங்கள் உரிமம்/பதிவின் அடிப்படையில் நீங்கள் G2 சரிபார்ப்பை நாடினால், தயவுசெய்து பதிவேட்டில் உள்ளது போலவே அதே எழுத்துக்களை வழங்குவதை உறுதிசெய்யவும். Google உடன் உங்கள் சரிபார்க்கப்பட்ட பெயருடன் உங்கள் வணிகப் பெயர் பொருந்தவில்லை எனில், உங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடத்தக்க தாமதங்கள் அல்லது நிராகரிப்பு ஏற்படலாம்.

உங்கள் முழு வணிக முகவரியை வழங்கவும். *
குறிப்பு: இந்திய ஒழுங்குமுறை அமைப்பில் உங்கள் உரிமம்/பதிவின் அடிப்படையில் நீங்கள் G2 சரிபார்ப்பை நாடினால், இது விண்ணப்பதாரரின் உரிமம்/பதிவுடன் தொடர்புடைய முகவரியுடன் கட்டாயம் பொருந்த வேண்டும்.

உங்கள் வணிக தொலைபேசி எண்ணை வழங்கவும். *
குறிப்பு: இந்திய ஒழுங்குமுறை அமைப்பில் உங்கள் உரிமம்/பதிவின் அடிப்படையில் நீங்கள் G2 சரிபார்ப்பை நாடினால், இது விண்ணப்பதாரரின் உரிமம்/பதிவுடன் தொடர்புடைய தொலைபேசி எண் உடன் கட்டாயம் பொருந்த வேண்டும்.

தயவுசெய்து உங்கள் நிறுவனத்தின் CIN/FCRN/LLPIN/FLLPIN -ஐ வழங்கவும். *
குறிப்பு : கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் டேட்டாபேசில் உள்ள விண்ணப்பதாரருடன் தொடர்புடைய நிறுவனத்தின் CIN/FCRN/LLPIN/FLLPIN உடன் இந்தத் தகவல் பொருந்த வேண்டும்.

தயவுசெய்து உங்கள் வணிகம் பதிவு செய்யப்பட்டுள்ள நாட்டைக் குறிப்பிடவும். *

உங்கள் App Store அல்லது Google Play செயலிகள், YouTube சேனல்கள் அல்லது ஒத்த இணைப்புகள் உட்பட, உங்கள் விளம்பரங்கள் பயனர்களை வழிநடத்தும் டொமைன் பெயர்களின் முழுப் பட்டியலை வழங்குங்கள். கமாக்களை (அரைப்புள்ளிகளை) பயன்படுத்தி உங்கள் டொமைன் பெயர்களின் பட்டியலைப் பிரித்திடுங்கள். *
முக்கியம்: நீங்கள் விளம்பரப்படுத்த அனுமதிக்கப்படும் டொமைன்கள் இவையாக மட்டுமே இருக்கும். நீங்கள் ஒரு விரிவான பட்டியலை வழங்குவதை உறுதிசெய்யவும். அனைத்து டொமைன்களும் செயல்பாட்டில் இருக்க வேண்டும், பொதுவெளியில் கிடைக்க வேண்டும் மற்றும் விண்ணப்பித்த வணிகப் பெயருடன் தெளிவாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். (இந்தப் படிவத்தை அடுத்த முறை சமர்ப்பிப்பதாக இருந்தால், நீங்கள் இங்கு வழங்கும் டொமைன்கள் முந்தைய சமர்ப்பிப்புகளிலிருந்து எல்லா டொமைன்களையும் மாற்றிவிடும் என்பதை அறிந்து கொள்ளவும்).

உங்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டொமைன் பெயர்(கள்) ரெகுலேட்டர் ரெஜிஸ்ட்ரியில் சேர்க்கப்பட்டிருந்தால், தயவுசெய்து அந்த டொமைன் பெயர்(களை) இங்கே பட்டியலிடவும். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட டொமைன் பெயர்களை சமர்ப்பித்தால், கமாக்களை பயன்படுத்தி அவற்றை பிரிக்கவும். ரெகுலேட்டர் ரெஜிஸ்ட்ரியில் உங்கள் டொமைன் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால், பின்வரும் புலத்தை காலியாக விடவும்.
முக்கியமானது: இயலுகின்ற இடங்களில், உங்கள் ரெஜிஸ்ட்ரியில் ஒரு டொமைன் பெயரைச் சேர்ப்பதற்கும், அந்த டொமைனில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கான அணுகல் உங்களுக்கு இருப்பதை உறுதி செய்வதற்கும் நாங்கள் உங்களை வலுவாக ஊக்குவிக்கிறோம். இது இல்லை என்றால், அது எதிர்காலத்தில் விளம்பரம் செய்வதில் இடையூறுகளை ஏற்படுத்தலாம்.

தயவுசெய்து உங்களை அணுகக்கூடிய மின்னஞ்சல் முகவரியைப் பகிரவும். *

உங்கள் டொமைன் பெயர் ரெகுலேட்டர் ரெஜிஸ்ட்ரியில் பட்டியலிடப்பட்டிருந்தால், அந்த டொமைன் பெயரைப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை வழங்கவும்.
குறிப்பு: பொருத்தமான மின்னஞ்சல் முகவரியை வழங்கத் தவறினால் சரிபார்ப்பு தோல்வியடையும். தாமதங்களைத் தவிர்க்க, இந்த மின்னஞ்சல் முகவரி உங்கள் Google Ads கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்வதை நாங்கள் வலுவாக பரிந்துரைக்கிறோம்.

உத்தரவாதம் *
விண்ணப்பதாரராகிய நான், இன்றும் மற்றும் தொடர்ந்தும் விண்ணப்பதாரரால் வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும்/அல்லது ஆவணங்கள் உண்மையானவை மற்றும் சரியானவை என்றும் உள்ளூர் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணக்கமாக இருப்பதாகவும் உறுதியளிக்கிறேன்.

விதிமுறைகள் & நிபந்தனைகள் *
G2 ஃபைனாசியல் சர்வீசஸ் வெரிஃபிகேஷன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நான் படித்துப் புரிந்துகொண்டேன் என்பதற்கு ஒப்புதல் தெரிவிப்பதுடன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கடமைகளுக்கும் இணங்க இதன்மூலம் ஒப்புக்கொள்கிறேன்.

தனியுரிமை *
G2 ஃபைனாசியல் சர்வீசஸ் வெரிஃபிகேஷன் தனியுரிமைக் கொள்கையை நான் படித்துப் புரிந்துகொண்டேன் என்பதை ஆமோதிக்கிறேன் மற்றும் அதில் விவரிக்கப்பட்டுள்ளபடி தனிநபர் தரவுகள் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதற்கு இதன்மூலம் ஒப்புக்கொள்கிறேன்.